Friday, 7 September 2012

" ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்டதாய் "
அழகாக சொன்னார் தெய்வப்புலவர்...அந்த இன்பம் தாயிற்கு மட்டும் தானா?
தன்னை அர்ப்பணித்து தன் கடமை செய்த ஆசிரிய வர்க்கத்திற்கும் அல்லவா?
என் மாணவி இன்று சொன்னாள்...
ஆசிரியர் பணியே அறப்பணி! அதற்கு உன்னை அர்ப்பணி!அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள்...ஆனால் இன்றைய பொழுதின் சந்தோசம் என் தொழிலின் மேல் எனக்கு இருந்த சின்னஞ்சிறு வலிகளுக்கும் மருந்திட்டுப் போனது...
என் மாணவன் ரஷிகேஷ் ராமகிருஷ்ணனின் ஆங்கில கட்டுரை எலிசபெத் மகாராணியின் வைரவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை எண்ணி என் மனம் ஆனந்த தாண்டவம் ஆடிய வேளை இன்று....அதை என்னிடம் சொன்ன பொழுது அக்காவின் (அவன் தாய்) கண்களில் ஆனந்தம் மின்னுவதை கண்டேன்....வியந்தேன்....
சொல்ல முடியாத...வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத  சந்தோசம் அது....ஒரு கணம் அந்த தாயாய் வாழ மனம் துடித்தது...
நன்றியுடன்  விடைபெற்றேன்...

0 comments:

Post a Comment